செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மனித-ஏலியனாக வாழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!…

மனித-ஏலியனாக வாழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!…

மனித-ஏலியனாக வாழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!… post thumbnail image
ஹாலிவுட்:-நடிகர் லியோனார்ட் நிமோய் ஹாலிவுட் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அதிசய பிறவி என்றே கூறவேண்டும். 1931ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்த நிமோய் 8 வயதிலிருந்தே சின்ன சின்ன புரொடக்‌ஷன் கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்து, கல்லூரி படிப்பு முடிந்ததும் ஹாலிவுட்டில் நடிப்பிற்காக வாய்ப்பு தேடி அலைந்தார். 1950களில் கலிபோர்னியாவுக்கு சென்று சோடா கடை, கார் டிரைவர் என்று பகுதி நேரமாக பல வேலை பார்த்து நடிப்பு கற்றுக்கொண்டார். அவர் ஒரு நடிகனாக பிரபலமாக தொடங்கியது இந்த காலகட்டத்தில் தான். பின்னர் ‘ஸ்டார் ட்ரெக்’ திரைப்படம் ‘ட்விலைட் ஜோன்’ டிவி நெடுந்தொடர் என்று பல படங்களில் நடித்து தன் அற்புதமான நடிப்பால் உலக மக்களை வசப்படுத்தினார்.

பார்ப்பதற்கு சற்று விகாரமாக தெரியும் இவரது தோற்றம் ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தின் மனித-ஏலியன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப்போனது. அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அந்த கதாப்பத்திரத்தின் பெயரான ‘ஸ்போக்’ என்றே அவரை ரசிகர்கள் அழைத்தனர். நடிப்பு தவிர கவிதை, புகைப்படம், இசை என்று பல துறைகளில் தன் முத்திரையை பதித்த ‘ஸ்போக்’ ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தின் 3 மற்றும் 4-ம் பாகத்தை இயக்கினார். 6வது பாகத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் பங்காற்றினார். இது மட்டுமின்றி 1977 நான் ஸ்போக் இல்லை என்றும் 1995-ல் நான் ஸ்போக் என்றும் தன்னை பற்றிய இரண்டு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

கடந்த வருடம் முதலே நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிமோய் நேற்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 83. அவரது மறைவிற்கு அவருடன் நடித்த வில்லியம் ஷார்ட்னர், ஜார்ஜ் டக்கி உட்பட பல கலைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர். ‘நான் ஸ்போக்கை நேசித்தேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அவருக்கு உணர்வுப்பூர்வமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி