அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!…

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!…

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் அளித்து, 70 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அவர், நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா பற்றி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நாங்கள் செய்ததை விட யாரும் சிறப்பாக செய்து விட முடியாது என்ற அகந்தை எங்களுக்கு இல்லை. நீங்கள் (காங்கிரஸ் கூட்டணி அரசு) நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை (2013) நிறைவேற்றியபோது, நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நின்றோம். அதில் நீங்கள் அரசியல் லாபம் அடைய விரும்பியதை நாங்கள் அறிவோம். இன்னும் உங்களுடன் நாங்கள் நிற்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய விரும்பினோம். ஏனென்றால், அந்த சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது, வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கும் இடையூறாக அமைந்து விடும் என எல்லா முதல்-மந்திரிகளும் கூறினர்.

நாங்கள் அரசு அமைத்தபோது, தயவு செய்து விவசாயிகளைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் நீர்ப்பாசன வசதி, அடிப்படை கட்டுமான வசதி வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முதல்-மந்திரிகள் ஒரே குரலில் கூறினார்கள். அப்படி விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்.ஒரு கூட்டாட்சி அமைப்பில், முதல்-மந்திரிகளின் ஒருமித்த குரலை அசட்டை செய்யக்கூடிய அளவுக்கு நாங்கள் அகந்தை உள்ளவர்களா? விவசாயிகளின் நலன்களை நாங்கள் புறக்கணிக்க முடியுமா? தவறு ஏதாவது இருந்தால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு இல்லையா? நீங்கள் என்ன செய்திருந்தாலும், நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. இதை அரசியல்ரீதியாக எடை போட்டுப் பார்க்காதீர்கள்.இந்த சட்ட மசோதா விவசாயிகளின் நலன்களுக்கானது. அதில் ஏதேனும் குறைகள் இருப்பதாக நீங்கள் இன்னும் கருதினால், எந்த திருத்தங்களை செய்வதற்கும் நான் தயார். இதை நீங்கள் கவுரவ பிரச்சினையாக பார்க்காதீர்கள். இதில் நாம் என்ற அகந்தையான எண்ணம் கூடாது. பழைய சட்டத்தில் உள்ளதவறுகளை சரி செய்வதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி