செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!…

உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!…

உலக கோப்பை: 151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா!… post thumbnail image
ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆக்லாந்து நகரில் 20–வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக காணப்படுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆய்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் – டேவிட் வார்னர் களமிறங்கினர். 2வது ஓவரிலேயே சயுத்தி வீசிய பந்தில் பிஞ்ச் 14 ரன்னில் கிளின் போல்ட் ஆனார். பின்னர் வந்த வாட்சன், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவர்களும் நிதானமாகவும் கவனமாகவும் விளையாடினர். எனினும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் வாட்சன் 23 ரன்களிலும், வார்னர் 34 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் கிளார்க் (12), ஸ்மித் (4), மேக்ஸ்வல் (1), மார்ஷ் (0) ஆகியோரும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.2 ஓவரில் 151 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹடின் 43 ரன்கள் எடுத்தார்.நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.152 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து விளையாடி வருகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி