செய்திகள்,திரையுலகம் விருது விழா மேடையில் சரிந்து விழுந்த பிரபல பாப் பாடகி!…

விருது விழா மேடையில் சரிந்து விழுந்த பிரபல பாப் பாடகி!…

விருது விழா மேடையில் சரிந்து விழுந்த பிரபல பாப் பாடகி!… post thumbnail image
லண்டன்:-பாப் இசை உலகில் சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் பிரிட் விருதுகள் – 2015, விழா லண்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பாப் பாடகி மடோனா, மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார். விழாவின் போது கேப் கோட்டை அணிந்திருந்த மடோனா மேடையில் பாடியவாறே நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் இணைந்து நடனமாடிக்கொண்டிருந்த சக நடன நடிகர், அவர் அணிந்திருந்த கேப் கோட்டை பிடித்து இழுத்தார்.

அவ்வாறு இழுக்கும் போது மடோனாவின் உடலிலிருந்து அந்த கோட் நழுவியிருக்க வேண்டும். ஆனால் அந்த கோட்டை மடோனா இறுக்கமாக கட்டியிருந்ததால், அது நழுவாமல் போனதுடன் அவரும் கீழே விழ நேரிட்டது. இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து விழா நிகழ்வில் பங்கேற்ற அவர், தனது ‘லிவிங் பார் லவ்’ என்ற பாடலை அற்புதமாக பாடியதுடன், நடனமாடியும் அசத்தினார்.

விழா முடிந்த பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், நான் நன்றாக உள்ளேன். எனது கேப் கோட் டைட்டாக கட்டப்பட்டிருந்தது. எனினும் எதுவும் என்னை தடுத்துவிட முடியாது. மக்களின் அன்பு என்னை தூக்கி நிறுத்தியது. உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி என கூறியிருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி