செய்திகள்,திரையுலகம் நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!…

நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!…

நடிகை கவர்ச்சி ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!… post thumbnail image
சென்னை:-கவர்ச்சி நடிகை ஷகிலா தெலுங்கில் ‘ரொமான்டிக் டார்கட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்கள் மீதான வன்கொடுமைகளையும், அதை பார்த்து வெகுண்டெழும் ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கும் படமாக தயாராகிறது. ஷகிலா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த போது பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார். அதையும் படத்தில் கொண்டு வந்துள்ளார். இருட்டு உலகுக்குள் நடக்கும் பயங்கரங்களை இந்த படத்தில் சொல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. படத்தை வெளியிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று போனில் எச்சரிக்கிறார்களாம். இதனை ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஷகிலா தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். தடைகளை மீறி படத்தை ரிலீஸ் செய்வேன் என்றார். தெலுங்கு பல உலகில் ஷகிலா படம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி