செய்திகள்,திரையுலகம் எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…

எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…

எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்… post thumbnail image
திருநெல்வேலியில் தொழிலதிபராக இருக்கிறார் தங்கசாமி. இவருடைய தம்பி லகுபரன் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடக்கும் கலவரத்தில் லகுபரன் கொல்லப்படுகிறார். இது கலவரம் இல்லை, திட்டமிட்ட கொலை என்றும், இந்த கொலைக்கு ஒரு போலீஸ்காரரும், அரசியல்வாதியும் காரணம் என்பது தங்கசாமிக்கு தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்கிறார்.ஆனால், போலீசாரோ லகுபரன் கொலை செய்யப்பட்டதாக கூறி தங்கசாமி கொடுக்கும் ஆதாரங்களை மறைக்கிறார்கள். அவரையும் போலீசில் சிக்க வைக்கிறார்கள். இதனால் மிகுந்த வேதனையடையும் தங்கசாமி தனது தம்பியின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கிறார். அதற்கான நேரம் பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான நாயகன் சத்யாவின் அப்பா திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பராகி வருகிறார். கூடவே, அவர் தனது குடும்பத்தையும் அழைத்து வருகிறார்.
அங்குள்ள லோக்கல் டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் நாயகியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் சத்யா. அவள் பின்னாலேயே சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.இந்நிலையில், சத்யாவின் அப்பா மர்ம கும்பலால் கொல்லப்படுகிறார். பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதால் சத்யாவுக்கு, அவரது அப்பா பணிபுரிந்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடைக்கிறது. அதை ஏற்று பணிபுரிந்து வருகிறார்.தனது அப்பா சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், அந்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதி ஒரு விபத்தில் இறக்கிறார். இது திட்டமிட்ட கொலை என்று போலீசாரும், சத்யாவும் அறிகிறார்கள். தன்னுடைய அப்பாவின் மரணத்துக்கும், இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் உணர்கிறார் சத்யா. இதற்கிடையில், தங்கசாமி மீதும் போலீசாரின் சந்தேக பார்வை விழுகிறது.இறுதியில், தனது அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை சத்யா கண்டுபிடித்து அவர்களை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.நாயகன் சத்யாவுக்கு இது மூன்றாவது படம். மூன்றாவது படத்திலேயே போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை. ஆனாலும், ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். காதல் செய்யும் காட்சிகளில் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் காட்சிகளில் சரியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியவில்லை. நாயகி ஸ்ரீமிதி, தொகுப்பாளினியாகவும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நம் மனதில் அழகாக பதிகிறார். திரையில் பார்க்க அழகாகவும் இருக்கிறார்.

பெரும்பாலான படங்களில் கதாநாயகியை கவர்ச்சிப் பொருளாக காட்டுபவர்கள் மத்தியில் இப்படத்தில் இயக்குனர் தங்கசாமி, எந்த ஒரு ஆபாச காட்சிகளும் இல்லாமல் கதாநாயகியை படம்பிடித்திருக்கிறார். லகுபரண் சிறப்புத் தோற்றத்தில் வந்து நடித்துவிட்டு போனாலும் எளிதாக நம்மை கவர்கிறார்.இயக்குனர் தங்கசாமி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடைய வலுவான கதாபாத்திரத்தால் கதையை தூக்கி நிறுத்துகிறார். நடிப்பிலும், இயக்கத்திலும் சரிசமமாக பங்கிட்டு அழகுபட, கதையை தெளிவாக கூறியிருக்கிறார். படத்தின் முதல்பாதி கொஞ்சம் பொறுமையாக சென்றாலும், பிற்பாதி வேகம் பிடிக்கிறது.மனு ரமேஷன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான். ஜெய் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் மதயானை’ அதிரடி ஆக்சன்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி