செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் குவியும் சதங்கள் – ஒரு பார்வை… post thumbnail image
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மைதானங்களில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும், வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டுவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக பேட்ஸ்மேன்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலக கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களே நடந்துள்ளது. அதற்குள் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (215 ரன்), இலங்கையின் தில்ஷன் (161), தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் (138), இந்தியாவின் ஷிகர் தவான் (137), ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் (135), வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் (133), இங்கிலாந்தின் மொயீன் அலி (128), தென்ஆப்பிரிக்காவின் டுமினி (115), இந்தியாவின் விராட் கோலி (107), ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷைமான் அன்வர் (106), இலங்கையின் சங்கக்கரா (105), வெஸ்ட் இண்டீசின் லென்டில் சிமோன்ஸ் (102),

இலங்கையின் ஜெயவர்த்தனே (100) என்று 13 சதங்கள் அடிக்கப்பட்டு விட்டன. ஒரு நாள் போட்டி விதிமுறையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக செய்யப்பட்ட மாற்றங்கள் (பவர்-பிளே இல்லாத நேரத்தில் உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்தப்படும் பீல்டர் எண்ணிக்கை 5-ல் இருந்து 4-ஆக குறைப்பு) மற்றும் சரவெடிக்கு பெயர் போன 20 ஓவர் கிரிக்கெட் ஆகியவற்றின் தாக்கத்தால் இப்போது ரன்மழை பொழிவது எளிதாகி விட்டது.

இதே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 1992-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்திய போது வெறும் 8 சதங்கள் (மொத்தம் 39 ஆட்டம்) மட்டுமே அடிக்கப்பட்டிருந்தன என்பது நினைவு கூரத்தக்கது . 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் தான் அதிகபட்சமாக 24 சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன. இப்படியே போனால், அச்சாதனை காணாமல் போய் விடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி