செய்திகள்,திரையுலகம் அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள் என மூன்று சாதனை படைத்த டி வில்லியர்ஸ்!…

அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள் என மூன்று சாதனை படைத்த டி வில்லியர்ஸ்!…

அதிவேகமாக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள் என மூன்று சாதனை படைத்த டி வில்லியர்ஸ்!… post thumbnail image
சிட்னி:-கிரிக்கெட் உலகில் சாதனை வீரர் என்ற பெருமையை தொடர்ந்து ஏ.பி. டி வில்லியர்ஸ் பெற்று வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அதே மேட்ச்சில் 31 பந்தில் சதமடித்து, அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையும் படைத்தார்.

இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 64 பந்துகளில் 150 ரன்களை குவித்து அதிவேகமாக 150 ரன்களை குவித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் இந்த அனைத்து சாதனைகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே நிகழ்த்தியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி