இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…

விளம்பரங்கள்

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் கடந்த 15ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த ஆட்டத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் டெலிவிஷனில் கண்டுகளித்தனர்.

இந்தியாவில் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தை இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 29 கோடி பேர் பார்த்து இருக்கிறார்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்வு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: