செய்திகள்,விளையாட்டு ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!…

ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!…

ரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை!… post thumbnail image
பெங்களூர்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா அணி, 40 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 60.2 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 68 ரன்னும், கருண்நாயர் ஆட்டம் இழக்காமல் 49 ரன்னும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.

கர்நாடக அணியினரின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மும்பை அணி முதல் இன்னிங்சில் 15.3 ஓவர்களில் 44 ரன்னில் சுருண்டது. முதல்தர கிரிக்கெட்டில் மும்பை அணியின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். மும்பை அணியில் காயம் காரணமாக அபிஷேக் நாயர் களம் இறங்கவில்லை. ஸ்ரீயேஷ் அய்யர் (15 ரன்), சூர்யகுமார் யாதவ் (12 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் அடங்கினர். கர்நாடகா தரப்பில் வினய்குமார் 6 விக்கெட்டும், அரவிந்த் 2 விக்கெட்டும், அபிமன்யு மிதுன் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். 158 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 21 விக்கெட்டுகள் சரிந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி