செய்திகள்,திரையுலகம் திருப்புமுனையை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘புலி’ படம்!…

திருப்புமுனையை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘புலி’ படம்!…

திருப்புமுனையை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘புலி’ படம்!… post thumbnail image
சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில், நடிகர் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ’புலி’. இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் இப்படி ஒரு படத்தில் நடித்ததே இல்லை என இப்படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே படத்தின் பாதி ஷுட்டிங்குகளே நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் கேரள உரிமம் மிகபெரும் தொகைக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த கட்டமாக படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்திற்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். நடிகை ஹன்சிகா தற்போது விஜய் நடிக்கும் புலி, உதயநிதியின் இதயம் முரளி, சிம்புவின் வேட்டை மன்னன், ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என பல படங்களை கையில் வைத்து உள்ளார்.
ஆனால் புலி படம் தனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்கிறாராம். மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் நடிப்புக்கு தீனி போடும் வகையில் ராஜா காலத்து இளவரசி வேடம் என்பதில் ஏக குஷியில் உள்ளார். என்னிடம் பல படங்கள் கையில் இருந்தாலும் என் மார்க்கெட்டை நிலை நிறுத்த போகும் ‘புலி’ தான் என்று சொல்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி