செய்திகள்,திரையுலகம் அடித்து நொறுக்கும் நடிகை அமலாபால்!…

அடித்து நொறுக்கும் நடிகை அமலாபால்!…

அடித்து நொறுக்கும் நடிகை அமலாபால்!… post thumbnail image
சென்னை:-கல்யாணத்துக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்க முடியாது என்பதை நிறைய நடிகைகள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார், நடிகை அமலா பால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்து திருமணம் செய்த பிறகு சமுத்திரக்கனி இயக்கும் ‘கிட்ணா’ படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அமலா, பிறகு தமிழில் எந்தப் படமும் கிடைக்காமல் தாய்மொழியான மலையாளத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் சிறுவர்கள் கதையில், சூர்யா ஜோடியாக மஞ்சு வாரியரை நடிக்க வைக்க பேசினார்கள். ஆனால், அவர் வயது முதிர்ந்தவராகக் காணப்பட்டதால் அமலாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி