உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…

விளம்பரங்கள்

டுனிடின்:-உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மச்சான், ஹக் ஆகியோர் அதிகபட்சமாக தலா 31 ரன்கள் எடுத்தனர். பின்னர் வெற்றிக்கு 211 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாவேத் அகமதியும், மங்கலும் களமிறங்கினர். அகமதி அதிரடியாக விளையாட, மங்கல் சற்று திணறினார். இதனால் 8வது ஓவரின் போது ஏழு ரன்களுக்கு அவுட்டானார் மங்கல். அடுத்து வந்த ஸ்டனிக்சாய் அதே ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஷென்வாரி களமிறங்கினார். அவர் மிக நிதானமாக விளையாடி அணி வெற்றி பாதையை நோக்கி முன்னேற சிறப்பான அடித்தளம் அமைத்தார். 11வது ஓவரின் போது ஆப்கன் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அகமது தனது அரை சதத்தை பூர்த்தி செய்து 51 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நபி(1), சசய்(0), நஜிப் சட்ரன்(4), நெய்ப்(0), தவ்லத் சட்ரன்(9) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஆனால் மறுமுனையில் நங்கூரமாக நின்ற ஷென்வாரி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து சதத்தை நோக்கி முன்னேறினார். எனினும் துரதிருஷ்டவசமாக 96 ரன்களில் அவுட்டானார். எனினும் 10வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹமீத் ஹசனும், 11வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷபூர் சட்ரனும் சிறப்பாக விளையாடினர். 48வது ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி வரிசை ஆட்டக்காரர்களான இருவரும் அடுத்த 9 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து ஆப்கன் அணிக்கு உலக கோப்பை போட்டிகளில் முதல் வெற்றியை தேடித்தந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: