செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…

மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…

மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!… post thumbnail image
கோலாலம்பூர்:-கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், விமானம் குறித்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானம் காணாமல் போன போது என்ன நடந்தது என்பது குறித்து ஆவணப்படம் ஒன்று தயாராகி வருகிறது. அதன்படி காணாமல் போன விமானம் பற்றிய செயற்கைகோள் தகவல் திரட்டுகளை ஆராய்ந்த உலகின் பிரபலமான வானூர்தி பேரழிவு நிபுணர்கள், விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின், விமானம் சில மணி நேரம் வானில் பறந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

கிடைத்துள்ள ஆதாரங்களை மிகவும் கவனமாக ஆராய்ந்ததில், கடைசி ரேடியோ தொடர்புக்கு பின் விமானம் மூன்று முறை திரும்பியது தெரியவந்துள்ளது. முதல் முறை இடது பக்கமாக திரும்பிய விமானம், பின்னர் மீண்டும் மீண்டும் 2 முறை இடது பக்கமாகவே திரும்பி மேற்கு நோக்கி பயணித்து, பின்னர் தெற்கு புறமாக அண்டார்டிகாவை நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வானூர்தி பேரழிவு குறித்து ஆராயும் உலகின் முன்னணி ஆய்வாளரான மால்கம் பிரன்னர் இது குறித்து கூறுகையில், விமானத்தின் பாதை மூன்று முறை மாற்றப்பட்டுள்ளதன் மூலம் காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவர், திட்டமிட்டு விமானத்தின் போக்கை மாற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தனது 40 வருட அனுபவத்தில் இது போன்ற நிகழ்வை பார்த்ததில்லை என்று பிரன்னர் மேலும் கூறினார். பிரன்னர் உள்பட பல ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் அடுத்த மாதம் நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. அப்போது விமானம் குறித்த மர்மம் நீங்கும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி