செய்திகள்,திரையுலகம் கே.வி.ஆனந்துடன் இணைகிறார் நடிகர் விஜய்?…

கே.வி.ஆனந்துடன் இணைகிறார் நடிகர் விஜய்?…

கே.வி.ஆனந்துடன் இணைகிறார் நடிகர் விஜய்?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைந்து படம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், சிறிது ஓய்விற்குப் பின் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இதனிடையே ‘அனேகன்’ படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் விஜய்யை சந்தித்து புதிய கதை ஒன்றை சொன்னதாகவும், அந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கும் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்க உள்ள அந்தப் படத்தில் விஜய் நடிக்கலாம் என்றும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி