நடிகர் அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் – ஏ.ஆர்.முருகதாஸ்…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜீத் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இதில் விஜய்யுடன் இரண்டு முறையும், சூர்யாவுடன் இரண்டு முறையும் இணைந்து பணியாற்றியுள்ளார் முருகதாஸ். சமீபத்தில் வௌியான இவரது கத்தி படம் ரூ.100 கோடி வசூலித்தது.

இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் முருகதாஸ். அப்போது விஜய்யுடன் உடன் இரண்டு படங்களில் பணியாற்றிவிட்டீர்கள், அஜீத் உடன் எப்போது மீண்டும் இணையபோகிறார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முருகதாஸ், கதை ரெடியாகத்தான் இருக்கிறது. அஜீத் ஓ.கே. என்றால் நானும் ரெடி தான்.

பொதுவாக நான் ஒரு படத்தை முடித்த பின்னர் அஜீத்திடம் சென்று அடுத்தபடம் குறித்து பேசுவது உண்டு. ஆனால் அவர் வேறு ஏதாவது படங்களில் பிஸியாக இருப்பார், சில சமயங்களில் நான் பிஸியாக இருப்பேன். இப்படியே தள்ளி போய் கொண்டே போகிறது. நிச்சயம் நாங்கள் மீண்டும் இணைந்து படம் பண்ணுவோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: