‘கத்தி’ பட வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

விளம்பரங்கள்

தஞ்சாவூர்:-தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இளங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர் தாகபூமி என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். இதை திரைப்படமாக வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய கதையை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 22ம் தேதி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஜனவரி 23ம் தேதி 5 பேரும் ஆஜராக வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. 23ம் தேதி யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நேற்று (24–ந் தேதி) ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று வழக்கு விசாரணை வந்தது. அப்போது எதிர்தரப்பினர் சார்பில் வக்கீல்கள் சாம்பமூர்த்தி, செல்வக்குமார் ஆகியோர் ஆஜராக மனுதாக்கல் செய்தனர். இதையேற்று வழக்கு விசாரணையை மார்ச் 16ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: