உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் ஓய்வு?…

விளம்பரங்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் யூனுஸ்கான். 37 வயதான அவர் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்டில் தொடர்ந்து ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்றது. இந்த 2 போட்டியிலும் சேர்த்து யூனுஸ்கான் 6 ரன்களே எடுத்தார். கேப்டன் மிஸ்பா, அப்ரிடி ஆகியோரும் உலககோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: