ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…

விளம்பரங்கள்

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை மையமாக கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.

இன்று காலை சரியாக 6.09 மணிக்கு ஒங்கோலில் இருந்து சுமார் 60 முதல் 70 கிலோ மீட்டர் தூரமுள்ள சுற்றுப் பகுதிகளில் சுமார் 5 வினாடிகளுக்கு இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக ஐதராபாத்தில் உள்ள புவியியல் ஆய்வு மைய தலைமை ஆராய்ச்சியாளர் ஆர்.கே.சத்தா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: