செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை?…

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை?…

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் இயக்குனராக அறிமுகமான சிம்புதேவன் தொடர்ந்து வித்தியாசமான படங்களையே இயக்கி வருகிறார். முதன் முறையாக தமிழின் முன்னணி நடிகரான விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டமே படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற தகவல் ஓரளவிற்கு கசிந்துள்ளது. அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி, படத்தில் விஜய் கார்ட்டூனிஸ்டாக வருகிறார். இவர் வரையும் படங்களுக்கு திடிரென்று உயிர் வருமாம்.மேலும், அது மட்டுமில்லாமல் அந்த படங்களின் சம்பவங்களுக்குள் விஜய் போவது போல் கதையம்சம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், இதுவும் வதந்தியாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி உருவாகும் கதைகளில் விஜய் மொத்தம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இதே கதையம்சத்தில் ஜுமான்ஜி என்ற ஹாலிவுட் திரைப்படம் முன்பே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி