செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…

செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…

செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!… post thumbnail image
புதுடெல்லி:-செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இறங்கியுள்ளது. இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்ற சேவை நிறுவனங்களுக்கு தொடர்பு கொடுப்பதற்கு தொலைபேசி சேவை நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, இந்த கட்டணத்தை டிராய் தளர்த்தியுள்ளது.

லேண்ட்லைனில் இருந்து லேண்ட்லைன், அல்லது லேண்ட்லைனில் இருந்து செல்போன்களுக்கு பேசும்போது, அதற்கான தொடர்பு கட்டணமாக ஒரு அழைப்புக்கு 20 பைசா வசூலிக்கப்படுகிறது. இண்டெர் கனக்‌ஷென் யூசேஜ் சார்ஜ் எனப்படும் இந்த கட்டணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டணம் 20 பைசாவில் இருந்து 30 சதவீதம் குறைத்து 14 பைசாவாக மாற்றப்பட்டுள்ளது.

டிராய் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் குறையும் என்பது குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள டிராய், வயர்லைன் நெட்வொர்க்குகளில் அதிக முதலீட்டை ஈர்க்க, எப்.டி.சி. மற்றும் எம்.டி.சி. எனப்படும் கட்டணங்களையும் நீக்கியுள்ளது. சில தொலைபேசி நிறுவனங்களே இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளது. காரணம் ட்ராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் நேரடி பயனடைபவர்கள் வாடிக்கையாளர்களே.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி