செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்து கெய்ல் சாதனை!…

உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்து கெய்ல் சாதனை!…

உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்து கெய்ல் சாதனை!… post thumbnail image
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ்வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் பார்மில் இல்லாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெருத்த தலைவலியாக இருந்தது. ஆனால் இன்று அதனை கெய்ல் மாற்றிக் காட்டியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் செய்துள்ளார். 147 பந்துகளில் 215 ரன்கள் அடித்து கெய்ல் சாதனை நிகழ்த்தியுள்ளார். உலக கோப்பையில் இதுவரையில் தென்ஆப்பிரிக்கா வீரர் கேரி கிறிஸ்டன் அடித்த 188 ரன்களே அதிகமான ரன்னாக இருந்தது. 1996-ம் ஆண்டு, கிறிஸ்டன் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அவரது சாதனையை கெய்ல் முறியடித்துள்ளார். 200 ரன்களை தாண்டியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் கெய்ல் பெற்றுள்ளார். உலக கோப்பையில் வரலாறு படைத்துள்ள கெய்ல், இந்தியர் அல்லாத ஒருவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியவர் என்ற பெருமையையும் தட்டி சென்றுள்ளார். ஒருநாள் போட்டியில் இந்தியர் இல்லாமல் 200 ரன்களை கடந்தவர் கெய்ல் ஒருவரே. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி