ரகசியமாக இலங்கை சென்றாரா நடிகர் சூர்யா?…

விளம்பரங்கள்

சென்னை:-இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டிற்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் படப்பிடிப்பு நடத்த அங்கு செல்வதில்லை. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால் பக்கத்து நாடான இலங்கைக்கு போக வேண்டும் என்றால் நிறைய தடைகள் இருக்கிறது.

இப்படி இருக்க நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் மாஸ் படக்குழுவினர் அனைவரும் இலங்கைக்கு சென்று அங்கு படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டால், தூத்துக்குடியில் தான் படப்பிடிப்பு நடத்தினோம், இலங்கைக்கு செல்லவே இல்லை, யாரோ பரப்பிவிடும் வதந்தி என்று கூறியுள்ளார். ஒருவேளை இலங்கையில் எடுத்திருந்தால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: