பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி மரணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி.சக்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. பரமக்குடியை அடுத்த புழுதிக்குளத்தில் பிறந்த ஆர்.சி. சக்தி, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்புத் துறையில் ஆர்வம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக்குழுவை ஆரம்பித்தார். இவர் நடித்த நாடகத்தினை கிராம மக்கள் அனைவரும் பாராட்டியதோடு, சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர்.

ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய ஆர்.சி. சக்தி, நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கமல், இந்த படத்தில்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்று முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.

மேலும், ரஜினியை வைத்து ‘தர்மயுத்தம்’, விஜயகாந்தை வைத்து ‘மனக்கணக்கு’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இவர் படங்கள் இயக்கியது குறைவுதான் என்றாலும், அனைத்தும் இவருக்கு உரித்தான தனி ஸ்டைலில் இருக்கும். ஆர்.சி.சக்தியின் மறைவு தமிழ் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: