செய்திகள்,திரையுலகம் உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள ‘காக்கி சட்டை’ வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாம். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்திற்கும் உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளதாக படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

டிவியிலிருந்து வந்தாலும் சிவகார்த்திகேயனின் அப்போதைய டிவி நிகழ்ச்சிகளைக் கூட யு டியூபில் தேடிப் பார்த்து பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என இணையதள வல்லுனர்களும் தெரிவிக்கிறார்கள். அந்தப் புகழ்தான் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளரக் காரணமாக இருந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா, எமிரட்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து மற்றும் தமிழர்கள் பரவலாக வசிக்கும் பல நாடுகளிலும் தமிழ் சினிமாவின் சீனியர் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டு, அவருக்கே முன்பே திரையுலகில் ஹீரோவானவர்களே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி