தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி – ஒரு பார்வை…

விளம்பரங்கள்

மெல்போர்ன்:-உலகக்கோப்பை போட்டியின் நேற்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவை முதன்முதலாக வெற்றி கண்டுள்ளது.

இந்த போட்டியில் இந்திய வீரர் தவான் 146 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 137 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. தவான் இதுவரை ஒருநாள் போட்டியில் 7 சதங்கங்கள் அடித்துள்ளார். அவர் சதம் அடித்துள்ள எந்த போட்டியிலும் இந்தியா தோற்றதில்லை. இந்த பெருமையுடன் தவான் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.இதுவரையில் தவான் அடித்துள்ள சதங்கள் ஒரு பார்வை:-

1. 2013-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 114 ரன்கள்

2. 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 102 (அவுட் இல்லை) ரன்கள்

3. 2013-ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக 116 ரன்கள்

4. 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100 ரன்கள்

5. 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 119 ரன்கள்

6. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 113 ரன்கள்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: