செய்திகள்,திரையுலகம் ‘தல 56’ படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடம்!…

‘தல 56’ படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடம்!…

‘தல 56’ படத்தில் நடிகர் அஜித்துக்கு இரட்டை வேடம்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஷாலினிக்கு குழந்தை பிறந்த பிறகு அந்தப் படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்கள் தல 56 என தற்காலிகப் பெயர் வைத்துள்ளனர். தல 56 படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது மட்டும் தான் அனைவரும் அறிந்த தகவல், பலருக்கும் அறியாத தகவல் என்ன தெரியுமா? அந்தப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கிராமத்து இளைஞனாக ஒரு வேடத்திலும், நகரத்தில் வசிப்பவராகவும் இன்னொரு வேடத்திலும் நடிக்கிறாராம் அஜித். இவருடன் சந்தானம் படம் முழுவதும் இணைந்து வருகிறார். இதற்கு முன்பு அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில், அசல் படம் மட்டும்தான் தோல்வியடைந்தது. அதற்கு முன் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வில்லன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி