அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!… post thumbnail image
பாட்னா:-பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் சரத்யாதவுடனும், நிதிஷ்குமாருடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால் அவர் முதல் மந்திரி பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

பின்னர் ஆளுநரை சந்தித்த நிதிஷ் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநரோ அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மான்ஜிக்கு உத்தரவிட்டார். இதனால் பீகார் அரசியலில் குழப்பம் நிலவியது. ஆளுநரின் முடிவுக்கு பின்னால் பா.ஜ,க, இருப்பதாக நிதிஷ் குற்றம் சாட்டினார். ஆளுநரின் நடவடிக்கைக்கு செக் வைக்கும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது ஐ.ஜ.தளத்தை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்தால் மான்ஜிக்கு சிக்கல் வலுத்தது.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால் அவர்களது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் சிக்கல் மேலும் வலுத்தது. எனினும் மான்ஜிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக பா.ஜ.க. நேற்று மாலை அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை ஆளுநரை சந்தித்த மான்ஜி, தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே மான்ஜி ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி