செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!…

உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!…

உலக கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்து மெக்கல்லம் சாதனை!… post thumbnail image
வெலிங்டன்:-உலக கோப்பை போட்டியின் 9-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக பந்துவீசியதுடன், பேட்டிங்கிலும் ஆக்ரோஷத்தை காட்டி 13-வது ஓவரிலேயே வெற்றி பெற்றது.

அந்த அணியின் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான மெக்கல்லம் பொறி பறக்க ஆடினார். 18 பந்துகளில் 50 ரன்கள் குவித்து உலக கோப்பை போட்டிகளில் விரைவாக அரைசதம் அடித்த தனது சாதனையை தானே முறியடித்தார் மெக்கல்லம். இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார் மெக்கல்லம். இன்றைய ஆட்டத்தில் 25 பந்துகளை மட்டுமே சந்தித்த மெக்கல்லம் 77 ரன்களுக்கு அவுட்டானார். இந்த ஸ்கோரில் 7 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி