இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…

விளம்பரங்கள்

ஜுரிச்:-ஸ்விட்சர்லாந்து நாட்டில் இன்று இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜுரிச் நகரில் இருந்து வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள ரஃப்ஸ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெற்ற இந்த விபத்துக்கு இரு ரெயில்களில் ஒன்று சிக்னலை மதிக்காமல் சென்றதுதான் காரணம் என கருதப்படுகின்றது.

ஜுரிச்சில் இருந்து புறப்பட்ட அதிவேக உள்ளூர் ரெயில் எதிர் திசையில் இருந்து வந்த புறநகர் ரெயிலின் மீது மோதியதில் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதிய வேகத்தில் புறநகர் ரெயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டதால் புலாச் மற்றும் ஸ்காஃப்ஹாவ்ஸென் நகரங்களுக்கு இடையிலான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துவந்த போலீஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களின் மூலமாக காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: