செய்திகள்,திரையுலகம் சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜய்!…

சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜய்!…

சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் திரையுலகில் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வந்து உதவ கூடியவர். கமலின் விஸ்வரூபம் பிரச்சனையின் போதும், அஜித் கடந்த ஆட்சியில் ஒரு மேடையில் பேசிய சர்ச்சை உரையினால் ஏற்பட்ட பிரச்சனையின் போதும் விஜய் தன் ஆதரவை தெரிவித்தார். அந்த வகையில் தற்போது லிங்கா படத்தின் நஷ்ட ஈடு வழங்கும் பிரச்சனை மெகா பிச்சை எடுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இதை கண்டிக்கும் விதத்தில் சில நடிகர்கள் ’நீங்கள் நஷ்டத்திற்கு பணம் கொடுத்து பழகி விட்டீர்கள், எனவே தான் உங்களின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் நெருக்கடி தருகிறார்கள்.

மேலும் இதே நிலை தொடர்ந்தால் மற்ற நடிகர்களும் பாதிக்கப்படுவோம். ரஜினியே கொடுத்து விட்டார் நீங்கள் தாருங்கள் என கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நஷ்டம் , லாபம் இரண்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பிரச்சனை. நடிகர்களிடம் கேட்பது முறையல்ல. அதே சமயம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் போது லாபத்தில் அதிகம் வந்த தொகையை நடிகர்களுக்கு சம்பளமாக மீண்டும் முன்வைப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்’. இந்த கேள்வியை கேட்டவர்களில் ஒருவர் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றொருவர் விஜய் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி