செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!…

அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!…

அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!… post thumbnail image
புவனேசுவரம்:-இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சேர்க்கப்படும் ஏவுகணைகள் அடிக்கடி சோதனை செய்து பார்க்கப்படும். அதன்படி இன்று பிரிதிவி – 2 வகை ரக ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இருந்து லாஞ்சர் மூலம் பிரிதிவி – 2 ரக ஏவுகணை காலை 9.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை மிக துல்லியமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தது. இதன் மூலம் இன்று நடந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. கடந்த 2003–ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைக்ககப்பட்ட பிரிதிவி – 2 ரக ஏவுகணை தற்போது தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரிதிவி – 2 ஏவுகணை கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடியது.
இந்த ஏவுகணையில் 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணு ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்த முடியும். இன்று நடந்த சோதனை மூலம் இந்தியா எந்த நேரத்திலும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏவுகணை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி