பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-தெலுங்கு உலகின் பிரபல தயாரிப்பாளரான டி.ராமநாயுடு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தெலுங்கு உலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த ராமநாயுடு, தமிழில் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘வசந்த மாளிகை’, ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘தனிக்காட்டு ராஜா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். அதிக படங்களை தயாரித்தவர் என்று கின்னஸ் புத்தகத்தின் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தாதா சாகேப் பால்கே, பத்மபூஷன் என பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: