செல்பி படம் மூலம் உங்கள் சிலை செய்ய ரூ.6 ஆயிரம்!…

விளம்பரங்கள்

3 டி பிரின்டர் மூலம் நாம் விரும்பும் பொருள்களை தத்ரூபமாகச் செய்ய முடிகிறது. இந்த தொழில் நுட்பத்துடன் ஒவ்வொருவரின் படத்தையும் 3 டி மூலம் செல்பியாக எடுத்து, அதைக்கொண்டு அவரின் சிலையை செய்து கொடுக்க ஜெர்மன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக அந்த நிறுவனம், ஜப்பானில் டோக்கியோ, அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ், மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் தங்கள் ஸ்டூடியோக்களை அமைக்கிறது.

செல்பி மூலம் தங்கள் உருவச் சிலையை செய்துகொள்ள விரும்புகிறவர்கள், இந்த நிலையத்துக்குச் சென்று, ஸ்டைலாக நின்றுகொண்டு தங்களை 3 டி கேமரா மூலம் படம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நிறுவனத்தினர், அந்த படத்தை 3 டி பிரின்டர் மூலம் உருவச் சிலையாக செய்து தருவார்கள். 4 அங்குல உருவச்சிலை செய்ய ரூ. 6 ஆயிரமும், முழு உருவச் சிலை செய்ய ரூ. 45 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: