செய்திகள்,திரையுலகம் ‘அனேகன்’ 3 நாளில் ரூ.30 கோடி வசூல் – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!…

‘அனேகன்’ 3 நாளில் ரூ.30 கோடி வசூல் – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!…

‘அனேகன்’ 3 நாளில் ரூ.30 கோடி வசூல் – மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அனேகன்’. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அனேகன்’ 3 நாட்களில் ரூ.30கோடியை வசூலித்துள்ளது. இந்த வசூல் தெலுங்கு பதிப்பை தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. நன்றி… நன்றி… நன்றி… வருகிற 20ம் தேதி ‘அனேகன்’ தெலுங்கு பதிப்பான ‘அனேகடு’ வெளியாகவிருக்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி