அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் கட்சியில் புதிதாக சேர்ந்த கிரண் பேடியை பா.ஜ.க.வின் முதல்–மந்திரி வேட்பாளராக நிறுத்தியதால் தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

கிரண்பேடியும் அதை ஒத்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க.வின் தோல்விக்கு தானே முழு பொறுப்பு ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பா.ஜ.க. தோல்வி பற்றி தன் இணையதளத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– டெல்லி தேர்தலில் நான் எனது முழு ஆற்றலை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்காக உழைத்தேன். என்றாலும் நான் அரசியல் பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டேன்.

ஆனால் மனதளவில் நான் தோல்வி அடையவில்லை. தேர்தலை சந்திக்க எனக்கு போதுமான அவகாசம் இல்லாமல் போய்விட்டது. என்றாலும் பா.ஜ.க. தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு ஆவேன். ஆனால் இதற்காக நான் ஓய்ந்து விடமாட்டேன். தொடர்ந்து அரசியல் பணியாற்றுவேன். இவ்வாறு கிரண்பேடி எழுதியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: