செய்திகள்,திரையுலகம் மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…

மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!…

மூன்று வேடங்களில் நடிக்கும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்தின் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் புலி படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி விஜய் இந்த படத்தில் முதலில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தான் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

தற்போது அது இரண்டு அல்ல மூன்று என்று கிசுகிசுக்கப்படுகிறது. இரண்டு விஜய் கமாண்டோ மற்றும் கார்டூனிஸ்ட் வேடங்களிலும் மூன்றாவது விஜய்யின் கதாபாத்திரம் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது என்கிறது கோடம்பாக்க ஏரியாக்கள். தலக்கோணத்தில் இன்னும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது, சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது என்பது தற்போதைய தகவல். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் எடிட்டிங் அடுத்தடுத்து நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாடல்கள் மே மாதத்திலும், ஜுலையில் படம் வெளிவரலாம் என்றும் சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி