ரசிகர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.! – ‘தல’ நம்பிக்கை

விளம்பரங்கள்

சென்னை :- என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மார்க்கெட் மேலும் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அருண் விஜய் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். இதில் அவர் பல ருசிகர தகவலை கூறினார். குறிப்பாக அஜித் தன் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றி கூறினார்.

அவர் கூறுகையில் ‘ நாங்கள் சென்னையின் ஒரு பிரபல பகுதியில் ஷுட்டிங் எடுத்த போது, அஜித் ரசிகர்கள் பலர் அங்கு கூடினர், அப்போது தன் விரல் அசைவால் தன் ரசிகர்களை அமைதியாக்கினார்.

பிறகு ஒருவர் வந்து. சார் உங்க ரசிகர்கள் சத்தம் போட்டுகிட்டே இருக்காங்க என்று கூற, நம்ம பசங்க அப்படி செய்ய மாட்டார்களே, என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்’ என அருண் விஜய் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: