செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் அஜித்தை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்…!

நடிகர் அஜித்தை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்…!

நடிகர் அஜித்தை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்…! post thumbnail image
சென்னை :- அஜித் எப்போதும் சண்டைக்காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர். அந்த வகையில் ஆரம்பம் படத்தில் சண்டைக்காட்சி அமைத்த லீ விடேக்கர் தான் சமீபத்தில் அஜித் பற்றி கூறியுள்ளார். லீ தான் எடுக்கும் சண்டைக்காட்சிகள் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிப்பார். இவர் ஆரம்பம் மட்டுமின்றி லிங்கா, விஸ்வரூபம் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், பல ஹாலிவுட் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் ‘ நண்பர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மிகவும் நன்றாக உள்ளதாக கேள்விப்பட்டேன், அவர் இந்த படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார், அவருக்கும் என் வாழ்த்துக்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி