செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…

உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…

உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்… post thumbnail image
அடிலெய்ட்:- நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

டோனி தலைமையிலான இந்தியா தொடக்க ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களுக்கு மேல் விளையாடி வரும் இந்திய அணி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.

இதனால் உலககோப்பையில் நெருக்கடியுடன் ஆட வேண்டிய நிலை உள்ளது. உலககோப்பை மிகப்பெரிய போட்டி என்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் பாகிஸ்தானுடனான போட்டியில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. நம்பிக்கை நட்சத்திர வீரரான வீராட் கோலியின் ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

அவர் 3–வது வீரராக களம் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்னா, ரகானே, டோனி முறையே 4–வது, 5–வது மற்றும் 6–வது வீரராக ஆடுவார்கள்.

பலவீனமான பந்துவீச்சை சமநிலைப்படுத்த பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்க வேண்டும். உலககோப்பையில் பாகிஸ்தானிடம் இதுவரை இந்திய அணி தோற்றது இல்லை. அந்த ஒரே நம்பிக்கை தான் பிளஸ் பாயிண்டாக உள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தினால் தான் இந்திய அணியின் முன்னேற்றப்பாதை இருக்கும். தோற்றால் மனரீதியான நெருக்கடி ஏற்படும். இதனால் டோனிக்கு இந்த ஆட்டம் மிகவும் சவாலாக இருக்கும்.

பாகிஸ்தான் அணி இந்த முறையாவது உலககோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. 2 பயிற்சி ஆட்டத்திலும் வென்றதால் (வங்காளதேசம், இங்கிலாந்து) அந்த அணிகள் நம்பிக்கையுடன் உள்ளது.

கேப்டன் மிஸ்பா–உல்–ஹக் பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார். ஷேசாத், யூனுஸ்கான், ஆல்ரவுண்டர் அப்ரிடி, கமரன் அக்மல், சோகைல், வகாப் ரியாஸ், முகமது இர்பான் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:–

இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ஜடேஜா, அஸ்வின், மொகித்சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அம்பதிராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர்குமார், அக்‌ஷர் பட்டேல்.

பாகிஸ்தான்: மிஸ்பா–உல்–ஹக் (கேப்டன்), ஷேசாத், ஜாம்ஷெட், யூனுஸ்கான், ஹாரிஸ் சோகைல், உமர் அக்மல், சோயிப் மசூத், அப்ரிடி, வகாப் ரியாஸ், முகமது இர்பான், யாசிர் ஷா, ஆதில், சோகைல் கான், சர்பிராஸ் அகமது, ரகத் அலி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி