செய்திகள்,திரையுலகம் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை பூஜா காந்தி!…

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை பூஜா காந்தி!…

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை பூஜா காந்தி!… post thumbnail image
சென்னை:-‘கொக்கி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா காந்தி. இவர் தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் நிறைய கன்னட மொழிப் படங்களிலும், மலையாளம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது விபத்தில் சிக்கியிருக்கிறார்.

பெங்களூரு சாலையில் பூஜா காந்தி காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவருடைய காரில் மோதியிருக்கிறது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தருக்கும், பூஜா காந்திக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அருகே உள்ள மருத்துவமனையில் பூஜா காந்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி