அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்: பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார் – ஒபாமா!… post thumbnail image
வாஷிங்டன்:-ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8ம் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் அதன் நேச நாடுகளும் இதில் இணைந்து கொண்டுள்ளன. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து 3 ஆண்டுகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடி, அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக அவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள குடியரசு கட்சியினருடனும், தனது ஜனநாயக கட்சியினருடனும் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தீர்மானத்தை செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது. ஒபாமாவின் தீர்மானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தரைவழி தாக்குதல் நடத்தவும் வழி செய்கிறது. ஈராக்கில் கடந்த 2002-ம் ஆண்டு, போர் தொடுத்த போது இதே போன்றதொரு தீர்மானத்தை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது நினைவுகூரத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி