பிள்ளையாருக்கு உகந்த விரத நாள்…

விளம்பரங்கள்

இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக விரதமிருந்துபக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும்.

விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். விரதமிருந்து மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள்.

கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர். விரத நாளின் கடைசியில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: