இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘legacy contact’ என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் அக்கவுண்டை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு நாமினேட் செய்யப்பட்டவர் நாம் இறந்த பிறகு நம்முடைய பேஸ்புக் அக்கவுண்டில் profile information-ஐ எடிட் செய்யலாம், கவர் போட்டோவை அப்டேட் பண்ணலாம், நண்பர்களின் ரிக்வெஸ்ட்களை accept அல்லது reject செய்யலாம். போஸ்ட்களை சேமித்து வைக்கலாம். ஆனால், நமது private message-களை அவரால் படிக்க முடியாது. மேலும், நமது பெயரில் ஒரே ஒரு போஸ்டை மட்டுமே tag செய்ய முடியும். இந்த புதிய வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: