சசிதரூரிடம் மீண்டும் விசாரணை!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சமீபத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சுனந்தாவின் மகனிடம் கடந்த 5ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல சசிதரூரிடம் கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவரை 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையே சசிதரூரிடம் இன்று மீண்டும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இதற்காக அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி அவர் இன்று டெல்லி சரோஜினிநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
ஐ.பி.எல். கோணத்திலும் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். சுனந்தா மகன் சிவ்மேனன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: