செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 4 லட்சம் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை அறிவித்து உள்ளது.இதில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் ரூ.599 மட்டுமே. இவை அனைத்தும் முன்கூட்டி பதிவுசெய்யும் டிக்கெட்டுகளாகும். இந்த விமான நிறுவனத்தில் உரிமையாளர்கள் மாறிய பிறகு கடந்த 2 வாரத்தில் 4-வது சலுகை கட்டணத்தை அறிவித்து உள்ளது.

இந்த சலுகை கொழும்பு, காபூல், மற்றும் துபா-ய்–அகமதாபாத்–துபா செக்டார் தவிர சர்வதேச விமானங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதன் கட்டணம் தொடக்கம் ரூ.3,499 மட்டுமே
இதன் முன் பதிவு தற்போது தொடங்கி விட்டது. பிப்ரவரி 13 ந்தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயண காலம் ஜூலை 1 முதல் அக்டோபர் 24ம் தேதி வரையாகும்.

இந்த சலுகையின் கீழ் ஹைதராபாத்- விஜயவாடா, டெல்லி -டேராடூன்,கவுகாத்தி-கொல்கத்தா,அகமதாபாத்-மும்பை,பெங்களூரு-ஹைதராபாத், ஆகிய விமாங்களுக்கு கட்டணம் ரூ.599 தான்.
சில கட்டணங்கள் ஏசி ரெயில் கட்டனத்தை விட குறைவாக உள்ளது. என தலைமை வர்த்தக அதிகாரி கனீஸ்வரன் அவிலி தெரிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி