செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?…

நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?…

நடிகர் விஜய்யின் ‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு?… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. அங்கு தம்பி ராமையாவுடன் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார்.

இதனால், ஸ்ருதி, ஸ்ரீதேவி, ஹன்சிகா ஆகியோர் மிகுந்த பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும், விஜய்யும் முதன் முறையாக சுத்தமான தமிழில் பேசவிருக்கிறாராம். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் மைசூர் அரண்மனையில் நடந்து முடிந்தது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து படக்குழு மீண்டும் தலக்கோணத்திற்கு திரும்பியுள்ளது, ஏற்கனவே இங்கு எடுக்கப்பட்ட காட்சிகளின் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

அதோடு இந்த படத்தில் பவர்ஸ்டார் மற்றும் நான்கடவுள் ராஜேந்திரன் நடிப்பதாக வந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மே மாதத்தில் நடைபெறவுள்ளது, படம் ஜூலை ஆரம்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி