அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…

சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!…

சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை!… post thumbnail image
புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. பின்னர் அக்குழுவினர் சசி தரூரின் உதவியாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதே போல் முன்னாள் எம்.பி. அமர் சிங்கும் விசாரணையில் பங்கேற்று போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் பின் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனும் விசாரணையில் பங்கேற்று காவல்துறையினரின் கேள்விக்கு பதிலளித்தார்.

இந்நிலையில் சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி மாநில காவல் ஆணையர் பாஸி கூறியுள்ளார். நாளைய விசாரணையின் போது தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக அவரிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட உள்ளதாக பாஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுனந்தா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி