செய்திகள்,திரையுலகம் எந்திரனை மிஞ்சுகிறதா ‘ஐ’ படம்?…

எந்திரனை மிஞ்சுகிறதா ‘ஐ’ படம்?…

எந்திரனை மிஞ்சுகிறதா ‘ஐ’ படம்?… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ‘ஐ’. அதிக விமர்சனத்துள்ளான இப்படத்தில் விக்ரமின் நடிப்பும், பிரம்மாண்டமும் பாராட்டப்பட்டது. படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தமிழ் திரையுலக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் தெலுங்கிலும் படம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டி லாபத்தைக் கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை படம் திரையரங்குகள் மூலம் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம்.

மற்ற உரிமைகள், வெளிநாட்டு மொழிகளில் வியாபாரம் என இந்தப் படத்தின் வியாபாரம் முழுவதும் முடிவடையும் போது எந்திரன் படத்தின் மொத்த வியாபாரத்தையும் மிஞ்சி தமிழில் அதிக வசூலையும், வியாபாரத்தையும் புரிந்த படம் என முதலிடத்தில் வந்து நிற்கும் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி