லிங்கா, கத்தி சாதனையை முறியடிக்க தவறிய ‘என்னை அறிந்தால்’ படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்‘ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் 10.80 கோடி வசூல் செய்து உள்ளது. எனினும் சமீபத்தில் வெளியான படங்களின் சாதனைகளை முறியடிக்க என்னை அறிந்தால் தவறி விட்டது. ரஜினிகாந்தின் லிங்கா தமிழ் மொழி வெளியீடு ரூ.18.3 கோடி வசூல் செய்து உள்ளது.

விஜய்யின் கத்தி 17 கோடி வசூல் செய்து உள்ளது. விக்ரமின் ஐ படம் ரூ.15.1 கோடி வசூல் செய்து உள்ளது. கேரளாவில் 107 தியேட்டர்களில் என்னை அறிந்தால் வெளியானது அங்கு ரூ 1.65 கோடி வசூல் செய்து உள்ளது. இங்கு ஐ படம் முதல் நாள் 2.5 கோடி வசூல் செய்து உள்ளது. அதுபோல் விஜய்யின் கத்தி ரூ.2.07 கோடி வசூல் செய்து உள்ளது.

என்னை அறிந்தால் கர்நாடகாவில் ரூ.2 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.8 கோடியும் என மொத்தம் கிட்டத்தட்ட 20 கோடி வரை வசூலித்து உள்ளது. அதேசமயம் உலக அளவில் ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா‘ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ‘ ரூ.27 கோடி வசூல் செய்து 2-வது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி‘ ரூ.23 கோடி வசூல் செய்து 3-வது இடத்திலும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: